இரண்டாவது பாதியில் காத்திருந்த வெற்றி

செவியே: லா லிகா காற்பந்துத் தொட ரில் நட்சத் திர ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தால் பார்சிலோனா காற்பந்துக் குழு வாகை சூடியது.
மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோல்கள் அந்த வெற்றிக்கு உதவின.
ஸ்பெயினின் லா லிகா தொடரில் அண்மைய போட்டிகளில் பார்சிலோனா பெரிதாக எதையும் சாதிக்காமல் வெற்றிகளைத் தொடர தடுமாறி வந் தது.
குறிப்பாக, கடந்த ஐந்து போட் டிகளில் ஒன்றில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் சனிக்கிழமை பின்னி ரவில் பலம் வாய்ந்த செவியாவுடன் பார்சிலோனா மோதியது.
தொடங்கியதிலிருந்து முதல் பாதி வரையில் இதற்கு முந்திய ஆட்டங் களைப்போலவே பார்சிலோனா ஆட்டக் காரர்கள் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
அதனால், முதல் பாதியில் 2=-1 என்று அந்த அணி பின்தங்கி இருந் தது.
குறிப்பாக, முதல் பாதி முடியும் வரை சமநிலையில் இருந்து வந்த ஆட்டம், 42வது நிமிடத்தில் கேப்ரியல் மெர்க்காடோவின் அதிரடி கோலால் செவியா முன்னணிக்குச் சென்றது.
அந்த அணியின் முதல் கோலை ஜீஸஸ் நவாஸ் புகுத்தி இருந்தார்.

இரண்டாவது கோலால் முன்னேற் றம் கண்டதும் அதனைக் கொண்டாடிய செவியா ஆட்டக்காரர்கள் ஆட்டத்தை வென்றுவிட்டதைப்போல உற்சாகம் காட்டினர்.
ஆனால், இரண்டாவது பாதியில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் லயனல் மெஸ்ஸி.
ஏற்கெனவே முதல் பாதியில் ஒரு கோல் போட்டு கணக்கைத் தொடங்கி இருந்த அவர் இரண்டாவது பாதியில் பல உத்திகளைக் கையாண்டார். அதற்குக் கைமேல் பலன் கிடைத்தது.
67வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய ஒஸ்மான் டெம்பெலே கொடுத்த பந்தைத் தம்வசமாக்கிய மெஸ்ஸி 'சூப்பர் ஷாட்' மூலம் அதனை கோலாக்கினார். அப்போது ஆட்டம் சமநிலை கண்டது.

மெஸ்ஸியின் வேகத்தைத் தடுத்து வெற்றி கோலைப் புகுத்த வேண்டும்; அல்லது பார்சிலோனாவின் வெற் றியைத் தடுக்க வேண்டும் என்ற வேட் கையோடு செவியா ஆட்டக்காரர்கள் வேகம் காட்டினர்.
இருப்பினும் அவர்களின் தடுப்பாட் டத்தைத் தாண்டி 87வது நிமிடத்தில் கோல் அடித்தார் மெஸ்ஸி. செவியாவின் கோல் காப்பாளரின் கைகளில் பட்டு விலகிச் சென்ற பந்தை லாவகமாக உதைத்து கோலாக்கினார் அவர்.
இந்த ஆட்டத்தின் அவரது ஹாட் ரிக் கோலாக அது அமைந்தது. சக ஆட்டக்காரர்கள் அவரைத் தோள் வரை தூக்கிக் கொண்டாடினர்.
இறுதியில் வெற்றி கோலை லூயிஸ் சுவாரெஸ் புகுத்தினார்.
இரண்டாவது பாதி ஆட்டத்தை இவ்விருவரும் முழுமையாக ஆக்கிர மித்துக்கொண்டதால் செவியா திண றியது.
இரண்டு கோல்களுக்கு மேல் முன்னேறிச் செல்ல அந்த அணியினர் மேற்கொண்ட முயற்சிகள் வீணாகிப் போயின. தோல்வியை நோக்கிச் சென்ற பார்சிலோனா இறுதியில் 4=2 என்ற கணக்கில் வென்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து பத்து புள்ளிகள் முன்னிலையில் பார் சிலோனா முதல் இடத்தில் தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!