விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரம்யா நம்பீசன். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதைக்களமும் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக ரொம்பவே மெனக்கெடுகிறார் விஜய் ஆன்டனி. படத்தின் லாபம் வசூலுக்கெல்லாம் அடுத்த இடம்தான். இந்நிலையில், 'திமிரு பிடிச்சவன்' படத்தை அடுத்து கொலைகாரன்', 'அக்னி சிறகுகள்', 'தமிழரசன்' உள்ளிட்ட 3 படங்க ளில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆன்டனி. இதில் 'தமிழரசன்' படம் பாபு யோகீஸ்வரன் இயக் கத்தில் உருவாகிறது. படத்துக்குப் பூசை போட்ட கையோடு படப்பிடிப்பை துவக்கிவிட்டனர். ஆனால் கதாநாயகியை மட்டும் ஒப்பந்தம் செய்யவில்லையாம். கடந்த சில தினங்களாக கதைக்கேற்ற சில நாயகி களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இறுதியில் ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து
உடனடியாக படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் ரம்யா. அவரும் விஜய் ஆன்டனியும் இணைந்து நடிக்கும்
காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனிஷ்காந்த் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவும் நடிக்கின்றனர்.
‘தமிழரசன்’: விஜய் ஆண்டனிக்கு ஜோடியானார் ரம்யா நம்பீசன்
28 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2019 09:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!