உலகின் தலைசிறந்த கலைஞர் பட்டத்தை வென்ற தமிழ்ச் சிறுவன்

இசையால் உலகத்தையே தன் பக்கம் திரும்ப வைத்திருக்கிறார் 13 வயது லிடியன் நாதசுவரம். வேர்ல்ட்ஸ் பெஸ்ட்' என்னும் அனைத்துலக நிகழ்ச்சியில் வெற்றி பெற்று உலகின் தலைசிறந்த கலைஞர் எனும் பட்டத்தைப் பெற்ற லிடியன், பரிசுத்தொகை 1 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் வென்றார்.

இந்நிகழ்ச்சியில் வாசித்துப் பிரபலமான லிடியன், உலக பிரசித்தி பெற்ற 'எலன் ஷோ'விலும் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
உலகின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்கும் பெருமைமிக்க இந்த நிகழ்ச்சியில் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு 'தர்கிஷ் மார்ச்' என்ற இசையைப் பியானோவில் வாசித்துப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார் லிடியன்.

இவர் இரண்டு பியானோக்களை இரண்டு பக்கத்திலும் வைத்துக் கொண்டு இரண்டு கைகளால் வெவ்வேறு இசைகளை வாசிக்கும் திறமை கொண்டவர்.
ஒரு கையால் 'மிஷன் இம்பாசிபில்' படத்தின் இசையை வாசித்தபடியே மற்றொரு கையால் 'ஹாரி பார்ட்டர்' படத்தின் இசையை இவர் வாசிப்பார்.
இரண்டு வயதாக இருக்கும்போது டிரம்ஸ் வாசிக்கத் துவங்கிய லிடியன் கிட்டார், தபேலா, மிருதங்கம் போன்ற இசைக் கருவிகளையும் வாசிப்பார்.
லிடியனின் இசையைப் பாராட்டாதவர்கள் இல்லை. புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் பாராட்டுகளைப் பெற்று வரும் இளம் கலைஞர் இவர்.
ஓர் இசை வெளியீட்டு விழாவில் டிரம்ஸ் வாசிக்கச் சென்றபோது ஏ.ஆர்.ரஹ்மானை லிடியன் சந்தித்தார்.
அதன்பிறகு அவருடைய இசைப் பள்ளியில் சேர்ந்து பயின்றார்.


இவர் 'எலன் ஷோ'வில் கண்களைக் கட்டிக்கொண்டு பியானோ வாசித்ததைக் காணொளியில் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் தமது பேஸ்புக் பக்கத்தில் லிடியனைப் பாராட்டி உள்ளார்.
லிடியனுக்கு உலகம் எங்கும் ரசிகர்கள் உள்ளனர். நியூயார்க்கில் லிடியன் படைத்த இசைநிகழ்ச்சியைப் பாராட்டி ஸ்டெயின்வே (STEINWAY) என்ற மதிப்புமிக்க பியானோவை ரசிகர் ஒருவர் சென்னையில் உள்ள லிடியனின் வீட்டிற்கு விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
இந்தச் சிறப்பைப் பெற லிடியன் கடுமையாக உழைக்கிறார். நாள்தோறும் 5 முதல் 6 மணி நேரம் பியானோ வாசித்துப் பயிற்சி செய்வார். இவர் வீட்டில் தொலைக் காட்சியே இல்லை. இவர் நேரத்தைக் கணக்கிட்டு செலவிடுகிறார்.


தமிழ்த் திரைப்பட இசைக்கு இசைக் கருவிகள் வாசிக்கும் இவருடைய தந்தைதான் இவருக்கு ஆசிரியர், வழிகாட்டி, குரு எல்லாமே.
ஒரு நிமிடத்திற்கு 350 பீட்களுடன் பியானோ வாசிக்கக்கூடிய லிடியன் பெரிய இலக்குகளைக் கொண்டிருக்கிறார்.
உலகத்திலேயே மிகச் சிறந்த பியோனா கலைஞராக வேண்டும், பியானோவுடன் நிலவுக்குச் சென்று அங்கு நிலவொளியில் பீட்டர் பேன் இசையை வாசிக்கவேண்டும், ஹாலிவுட்டில் சிறந்த பியானோ கலைஞர் என்ற பெயரை வாங்க வேண்டும் என்பதெல்லாம் லிடியனின் நீண்ட நாள் ஆசைகளாகும்.
தமிழ்ச் சிறுவனான லிடியன் உலக அரங்கில் தமிழர்களுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!