உலகிலேயே ஆக வயதான 112 வயது முதியவர் ஜப்பானில் மரணம்

தோக்கியோ: உலகிலேயே ஆக வயதான முதியவர் தமது 112வது வயதில் மரணம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர். யாசுடாரோ கோய்டி என்ற அந்த ஜப்பானியர் 1903 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்தவர். உலகிலேயே ஆக வயதான முதியவர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தவர்.

கின்னஸ் சாதனை விருதைப் பெற்றுக்கொண்டபோது அந்த முதியவர் தமது நீண்ட கால ஆயுளுக்கான ரகசியம் பற்றிக் கூறினார். "சிகரெட் புகைக்கும் பழக்கம் இல்லை. மதுபானம் எதுவும் அருந்துவதில்லை. மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன். இவைதான் எனது நீண்ட கால ஆயுளின் ரகசியங்கள்," என்று யாசுடாரோ அப்போது கூறினாராம்.

அவரது இதயம் செயலிழந்ததால் அவர் மரணம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர். அவர் மரணம் அடைந்துவிட்ட நிலையில் உலகிலேயே தற்போது ஆக வயதான முதியவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை.

உலகிலேயே ஆக வயதான மூதாட்டி என்ற பெயரை அமெரிக்க மாதான சுசானா முசாட் ஜோன்ஸ் பெற்றுள்ளார். இவருக்கு 116 வயதாகிறது. ஜப்பானிய மாது மிசோ மரணம் அடைந்த பின்னர் இந்த விருதை ஜோன்ஸ் பெற்றுள்ளார்.

உலகிலேயே ஆக வயதான முதியவர் என்று அறிவிக்கப்பட்ட யாசுடாரோ கின்னஸ் சாதனை விருதைப் பெற்றுக்கொண்டார். அவர் தனது 112 வயதில் மரணம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படம்: (கோப்புப் படம்) ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!