கள்ளக்குறிச்சி: தமிழகத்தின் மூளை முடுக்குகள் எங்கும் வாக்கு சேக ரிப்பு பணியும் பிரசாரமும் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத் துடன் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டமன்ற தொகுதி களுக்கும் தேர்தல் நடத்தப்பட வுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பல்வேறு பகுதி களிலும் தங்களது வேட்பாளர் களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கும் பணியில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தனது பிரசாரத்தை நேற்று துவங்கிய முதல்வர் பழனி சாமி, கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர் எல்கே சுதீ ஷுக்கு ஆதரவாக திறந்தவேனில் நின்றபடி பிரசாரம் செய்தார்.
அவர் பேசியபோது, "நாட்டில் நிலையான ஆட்சி இருந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழமுடியும். எதிரிகளைத் தூள்துளாக்கும் தைரியம் மோடியிடம் உள்ளது. நாட்டைப் பாதுகாக்க பிரதமர் மோடியால்தான் முடியும்," என்றார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை யில் கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பேசியபோது, தான் ஒரு சாதாரண தொண்டன்தான் எனவும் இந்தத் தேர்தலில் கிடைக்கும் வெற்றி அடிப்படை அதிமுக தொண்டனின் வெற்றி எனவும் தெரிவித்தார்.
கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ் ணன் நாகர்கோயிலில் பேசிய போது, 50 ஆண்டுகளில் செய்ய முடியாத பல திட்டங்களை நிறை வேற்றி உள்ளதாகக் கூறினார்.
சென்னை அரும்பாக்கத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம் பாலை அறிமுகம் செய்து பிரசாரம் செய்துள்ளார் ராமதாஸ்.
தமிழகத்தில் சூடுபிடிக்கிறது வாக்கு சேகரிக்கும் உத்தி; சுதீஷை ஆதரித்து முதல்வர் பிரசாரம்
23 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Mar 2019 12:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!