கூலித் தொழிலாளர்கள் பிரசாரத்துக்கு செல்வதால் தேனியில் விவசாயப் பணிகள் பாதிப்பு

தேனி: தேர்தல் பிரசாரத்தில் மிக அதிகமானோர் ஈடுபடுவதால் தேனி மாவட்டத்தில் விவசாயப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேனி மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இங்கு பல்வேறு கட்சியினரும் பிரசாரத்துக்காக ஆட்களை தேடிப் பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து கிராமப்புறங்க ளில் இருந்து விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகளவில் பிர சாரத்துக்காக அழைத்துச் செல்லப் படுகின்றனர்.
பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வது, கட்சிக்கொடி ஏந்தி முழக்கமிடுவது, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது, பொது மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது என இத்தொழி லாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவர்களுக்கு அன்றாடம் குறிப்பிட்ட ஒரு தொகை வழங்கப் படுவதுடன், பிரியாணி உணவும் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. பெரும்பாலானோர்க்கு கட்சிப் பிரமுகர்களின் செலவில் மது விநியோகிக்கப் படுவதாகவும் தமிழக ஊடகங்கள் சில தெரி வித்துள்ளன.
விவசாய கூலி வேலையைக் காட்டிலும் அதிக தொகை கிடைப் பதால் தொழிலாளர்களில் பெரும் பாலானோர் தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல விரும்புவதாகக் கூறப்படு கிறது.
மேலும் குறிப்பிட்ட கட்சி வேட் பாளரின் அறிமுகம் கிடைத்தால் எதிர்காலத்தில் தங்கள் தேவை களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று கணக்கிட்டும் சிலர் பிரசாரங்களில் பங்கேற்பது, அதற்காக ஆட்களைத் திரட்டுவது ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.
"ஏற்கெனவே விவசாயப் பணி களில் ஈடுபடுத்த ஆட்கள் கிடைக் காமல் தவிக்கிறோம். இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக கூலித் தொழிலாளர்கள் செல்வதால் அவர்களை நம்பியுள்ள சிறு, குறு விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
"வசதியுள்ள விவசாயிகள் மட்டும் விவசாய இயந்திரங்களை வைத்து பணிகளை மேற்கொண்டு சமாளித்துவிடுவர்," என்று தமிழக ஊடகங்கள் மேலும் தெரிவித் துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!