ஒளிப்பதிவாளர் நட்டி எனும் நட்ராஜ் நடிக்க வந்த பிறகு, எல்லாமே அவருக்கு ஏறுமுகம் தான். அவர் நடிக்கும் படங்கள் வசூல் ரீதியில் கையைக் கடிக்காமல் இருப்பதால், விநியோகிப்பாளர்களும் அவர் மீது பாசமாக உள்ளனர்.
இந்நிலையில் மில்கா எஸ். செல்வகுமார் இயக்கத்தில் நட்டி நட்ராஜ், மனிஷா யாதவ் நடிப்பில் உருவாகி வருகிறது `சண்டி முனி'.
இதில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வாசு விக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி, குண்டு ரவி, முத்துக்காளை ஆகியோரும் உள்ளனர்.
ஏ.கே.ரிஷால் சாய் இசைய மைக்க, வ.கருப்பன் பாடல்களை எழுதியுள்ளார்.
"இது ஒரு திகில் படம். நட்ராஜ் சண்டி என்கிற கட்டுமான பொறி யியலாளர் வேடத்தில் நடிக்கிறார். மனிஷா யாதவ் ராதிகா என்கிற ஆசிரியையாக நடிக்கிறார்.
முழுநீள குடும்பப் படமாக உருவாகும் இதில், நகைச்சுவைக் கும் பஞ்சமே இருக்காது.
ஒரு பெண்ணுக்கும், பேய்க்கும் இடையே நடக்கும் போராட்டத்தால் சூழ்நிலை போர்க்களம் ஆகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே மாட்டிக் கொண்டு விழிக்கிறார் நட்ராஜ்.
"இந்த மோதலின் முடிவில் என்ன ஆகிறது? என்பதை மிகவும் சுவாரசியமாகவும், சராசரி ரசிகர்களைக் கவரும் வகையிலும் படமாக்கி உள்ளோம். இது குடும் பத்துடன் பார்க்க வேண்டிய படைப்பு," என்கிறார் இயக்குநர்.
நட்டி நட்ராஜ், மனிஷா யாதவ் நடிப்பில் `சண்டி முனி’
22 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Apr 2019 10:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!