ஒரே வாரத்தில் 628 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டனர்

புத்தாண்டு தொடங்கியது. ஆனால் டெங்கியின் பாதிப்பு குறையவில்லை. ஜனவரியிலிருந்து டெங்கி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. இம்மாதம் 10ஆம் தேதியி லிருந்து 16ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் மட்டும் 628 டெங்கி சம்பவங்கள் பதிவானது. இது, கடந்த வாரத்துடன் ஒப் பிடுகையில் 80க்கும் மேற்பட்ட சம் பவங்களாகும். தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று இந்த விவரங்களை வெளியிட்டது. நேற்று முன்தினம் வரையில் கொசுக்கள் அதிகம் காணப்படும் 132 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வாரியம் குறிப்பிட்டது.

இவற்றில் 31 இடங்கள் சிவப்பு வட்டாரமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இடங்களில் பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட டெங்கி சம்பவங்கள் ஏற்பட்டதால் அதிக அபாயமிக்க இடமாகவும் கருதப்படுகிறது. மற்றவை மஞ்சள் வட்டாரங்கள். இந்நிலையில், கொசு இனப் பெருக்கம் அதிகரித்ததற்கு வெப்ப மான பருவநிலை காரணமாக இருக்கலாம். இதனால் பொது மக்கள் உடனடியாக உரிய நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வாரியம் தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!