அறிவார்ந்த கட்டடங்கள்: உலக அளவில் முன்னணியில் சிங்கப்பூர் நிறுவனங்கள்

சிங்கப்பூர் நிறுவனங்கள், தங்கள் வேலை இடங்களில் அறிவார்ந்த கட்டட அம்சங்களைப் பொருத்து வதில் மற்ற நாடுகளின் நிறுவனங் களைவிட உலக அளலில் முன்ன ணியில் திகழ்கின்றன.

அதோடு மட்டுமின்றி, மின் னிலக்கமயம், தொலைதூர சர்வர் களைப் பயன்படுத்திக்கொள்வது, இணையம் மூலம் பல சாதனங் களையும் இணைத்துப் புழங்குவது ஆகியவை பற்றி சிங்கப்பூர் நிறு வனங்கள் அதிக புரிந்துணர் வுடன் திகழ்கின்றன.

லண்டனில் தலைமை அலுவ லகத்தைக் கொண்டுள்ள கோண்டேகோ என்ற நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் இது தெரியவருகிறது.

சிங்கப்பூர் நிறுவனங்களின் இந்த முன்னேற்ற நிலைக்கு, 2017ல் தொடங்கப்பட்ட அறி வார்ந்த நகர் செயல்திட்டம் கார ணம் என்று தெரிகிறது.

அலுவலக தொழில்நுட்பங் களைப் பொறுத்தவரையில் பல அம்சங்களிலும் சிங்கப்பூர் முன் னணியில் திகழ்கிறது என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

சிங்கப்பூர், பிரிட்டன், அமெ ரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த 750 தொழில்துறைத் தலைவர்களை உள்ளடக்கி கோண்டேகோ ஆய்வு நடத்தியது.

அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரிகள், வேலையிட நிர்வாகி கள் ஆவார்கள். மற்றவர்கள் மூத்த நிர்வாகிகள்.

சிங்கப்பூரில் ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 72% தங் களுடைய அலுவலகங்களில் அறி வார்ந்த கட்டட அம்சங்கள் உள் ளடக்கப்பட்டு இருப்பதாக இந்த ஆண்டில் தெரிவித்தனர்.

உலகளவில் இப்படி தெரிவித் தவர்களின் அளவு ஏறக்குறைய 55% ஆக இருக்கிறது.

அறிவார்ந்த கட்டட அம்சங் களில் எரிசக்தி சிக்கன நடவடிக் கைகள், பல சாதனங்களையும் கட்டமைப்புகளில் உட்படுத்துவது முதலானவை அடங்கும்.

வேலை இடங்களில் இதர தொழில்நுட்பங்களைப் பயன் படுத்துவதிலும் சிங்கப்பூர் நிறுவங் கள் சிறந்து விளங்குகின்றன.

அறிவார்ந்த நகர் திட்டத்தை சிங்கப்பூர் தொடங்கி இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. இருந்தாலும் அதனால் பெரும் பலன் ஏற்பட்டு இருப்பதாகத் தெரிகிறது என்று கோண்டேகோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி பீட்டர் ஓட்டோ தெரிவித்தார்.

சிங்கப்பூர் நிறுவனங்கள் கூட் டங்களை நடத்துவதற்கான அறை களைக் கையடக்கச் சாதன செயலி மூலம் முன்பதிவு செய்வது சென்ற ஆண்டு ஆய்வுடன் ஒப் பிடுகையில் இந்த ஆண்டு 17% அதிகரித்து இருக்கிறது.

அடுத்த ஓராண்டில் தொலை தூர சர்வர் பயனீடும் இணையம் மூலம் பல சாதனங்களையும் இணைத்து பயன்படுத்துவதும் முக்கியமானதாக இருக்குமென அதிக உள்ளுர் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!