ஆளுநர் உரை குறித்து விஜயகாந்த் கடும் விமர்சனம்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக மக்கள் விரோத அதிமுகவின் ஆட்சி நடைபெற்று வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் ஆற்றிய உரையானது, முதல்வர் ஜெயலலிதாவை யும் அவரது ஸ்டிக்கர் அரசாங் கத்தையும் பாராட்டிப் புகழ்ந்து தள்ளும் புகழுரையாக மட்டுமே இருந்தது என விமர்சித்துள்ளார். "தமிழக ஆளுநர் ஆற்றியுள்ள உரை குறித்து தேமுதிக சார்பில் நான் கருத்து கூறுவதற்கு ஒன்றுமில்லை.

ஏனென்றால் 2012 முதல் 2015 வரை ஆளுநர் உரைக்கு நான் தெரிவித்துள்ள கருத்துகளே, இந்த உரைக்கும் பொருந்தும் வகையில் உள்ளது. "செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றி, காலம் கடந்து அதிகளவில் நீரை திறந்துவிட்டு, சென்னையில் செயற்கையாக பேர ழிவை ஏற்படுத்தியதை மறைத்து, மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களைப் போர்க்கால அடிப்படை யில் மீட்டது போன்றும், அனைவ ருக்கும் நிவாரண உதவிகள் முறையாக வழங்கியது போன்றும் தெரிவித்திருப்பது, 'பூனை கண்ணை மூடிக்கொண்டு உல கமே இருண்டு போனது' என்று சொல்வது போல் உள்ளது," என விஜயகாந்த் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா படிப்ப தற்காக எழுதிக் கொடுத்த உரையே, தமிழக ஆளுநரின் உரையாக மாற்றப்பட்டுள்ளதோ என்கின்ற ஐயம் தமக்கு மட்டுமல் லாமல் தமிழக மக்களுக்கும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மாநிலங்களுக்குள் ஓடும் ஆறுகளை இணைத்திடவோ, பூரண மதுவிலக்கை அமல்படுத் தவோ, விண்ணைமுட்டும் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்தவோ, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக அவசர சட்டம் இயற்றுவது குறித்தோ ஆளுநர் உரையில் எந்தவித அறிவிப்பும் இல்லை எனச் சுட்டிக்காட்டி உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!