அரசியலுக்கு வருகிறார் வடிவேலு

ஐந்து ஆண்டுகளாக ஓரம் கட்டப் பட்டிருந்த நடிகர் வடிவேலுவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்க உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து, 'கேப்டன்' விஜயகாந்தை வறுத்தெடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2011 சட்டசபை தேர் தலில் அதிமுக, - தேமுதிக கட்சி கள் கூட்டணி அமைத்து போட்டி யிட்டன. அப்போது, தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் இருந்த நடிகர் வடிவேலு திமுக கூட்ட ணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்.

அப்போதைய முதல்வர் கருணாநிதியும் துணை முதல்வர் ஸ்டாலினும் வடிவேலுவை அழைத் துப் பாராட்டியதோடு, 'தேர்தல் பிரசாரத்தில் எக்காரணம் கொண் டும் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்க வேண்டாம்' என அறிவுறுத்தினர். அதேநேரத்தில் 'நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய காந்தை விமர்சித்து பேச எந்த தடையும் இல்லை; உன் இஷ்டத் திற்கு புகுந்து விளையாடு' என உற்சாகமும் கொடுத்தனர். இதனால் விஜயகாந்தை விமர்சிப்பதை மட்டுமே ஒரே திட்டமாக வைத்து, திமுக பிரசார மேடை களில் வடிவேலு முழங்கினார். இருப்பினும் அந்தத் தேர்தலில் திமுக தோல்வியுற்று, அதிமுக ஆட்சிக்கு வந்ததால் வடிவேலு மீது பழிவாங்கல் படலம் துவங்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில், விஜயகாந்திற்கு எதிராக தீவிரமாகத் தேர்தல் பிர சாரம் செய்யும் தன் விருப்பத்தை அதிமுக முக்கிய புள்ளிகளிடம் தெரிவித்து, அக்கட்சி மேலிடத் தின் அழைப்புக்காகக் காத்திருப் பதாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!