இவ்வாண்டுக்கான முதல் வாகன உரிமைச் சான்றிதழுக்கான ஏலக் குத்தகையின் முடிவு சிறிய வகை கார் வாங்க விரும்புபவர்களுக்குச் சற்று சாதகமானதாக முடிந்துள்ளது. சிறிய வகை கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் கிட்டத்தட்ட 9,000 வெள்ளி குறைந்துள்ளது. அப்பிரிவின் கட்டணம் 54,301 வெள்ளியிலிருந்து 45,002 வெள்ளிக்குச் சரிந்தது.
பெரிய வகை கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணமும் குறைந்துள்ளது. அது 55,001 வெள்ளி யிலிருந்து 54,920 வெள்ளிக்குக் குறைந்தது. பெரும்பாலும் பெரிய வகை கார்களுக்காகப் பயன்படுத்தப்படும் பொதுப் பிரிவின் கட்டணம் 57,501 வெள்ளியிலிருந்து 55,089 வெள்ளிக்கு இறக்கம் கண்டது. சரக்கு வாகனங்கள், பேருந்துகளுக்கான சான்றிதழ் கட்டணம் 46,001 வெள்ளியிலிருந்து 42,036 வெள்ளிக்குக் குறைந்தது. மோட்டார் சைக்கிளுக்கான கட்டணம் மட்டும் $6,600லிருந்து $6,889க்கு ஏற்றம் கண்டது.