ஓரறை வீடுகளில் வசிக்கும் முதியோருக்கு அன்பளிப்புப் பைகள் வழங்கிய எஸ்பிஎச்

தோ பாயோ லோரோங் 1ல் ஓரறை வீடுகளில் வசிக்கும் 120 மூத்த குடிமக்களுக்கு சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனம் விழாக்காலத்தை முன்னிட்டு நேற்று அன்பளிப்புப் பைகளை வழங்கியது. ரொட்டி, தேயிலை, பால், பிஸ்கட்டுகள், அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட ஒவ்வோர் அன்பளிப்புப் பையின் மதிப்பு 50 வெள்ளியாகும். சீனப்புத்தாண்டை முன்னிட்டு அன்பளிப்புப் பைகளில் மாண்டரின் ஆரஞ்சுகளும் வைக்கப்பட்டு முதியோருக்கு வழங்கப்பட்டன.

எஸ்பிஎச்சை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அன்பளிப்புப் பைகளை விநியோகம் செய்தனர். 81 வயது திரு வேலுச்சாமியும் அவரது துணைவியார் திருவாட்டி ராஜலட்சுமியும் அன்பளிப்புப் பைகளைப் பெற்றுக்கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!