உற்சாகமளிக்கும் முன்னேற்பாடுகள்

வில்சன் சைலஸ்

இறுதிக் காவடி புறப்படுவதற்கான நேரத்தை நீட்டித்திருப்பது, மூத் தோர், பெண்களுக்கென தனித் தடம், காவடிகளைப் பிரிப்பதற்கான இடத்தை அகலப்படுத்தியது என பல மாற்றங்களைப் பக்தர்கள் வர வேற்றாலும் பெரும்பான்மையி னரை, குறிப்பாக காவடி ஏந்து பவர்களை அதிகம் கவர்ந்துள்ளது பக்திப் பாடல்களுக்கான ஊர்வலத் தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக மையப் புள்ளிகள். ஹேஸ்டிங்க்ஸ் சாலையில் தொடங்கி நேரடியாகவும் ஒலிப் பெருக்கியின் மூலமாகவும் பக்திப் பாடல்களை இசைப்பது காவடி ஏந்துபவர்களுக்குப் பலத்த உற் சாகம் அளிக்கக்கூடிய ஒரு மாற் றம் என்கிறார் கடந்த 13 ஆண்டு களாக அலகுக் காவடி ஏந்தும் 42 வயது திரு பிரித்தீவ் ராஜ்.

கடந்த பத்து ஆண்டுகளாக 'ஹரிகண்டக் காவடி' ஏந்துவதா கக் கூறிய இவர், காவடி ஏந்தும் பக்தர்கள் இறுதி வரை ஊர்வலத் தில் தொடர்ந்து சென்று தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்த உடலளவிலும் மனதளவிலும் பெரும் பக்கபலமாக அமைவது பக்தி இசை மட்டுமே என்றார். "இவ்வாண்டு ஊர்வலம் நெடுக பக்தி இசை ஒலிக்கும்படி செய்யப்பட்ட ஏற்பாடுகள் நிச்சய மாகப் பாராட்டிற்குரியவை. ஊர்வ லத்தின்போது பக்திப் பாடல்களை இடைவிடாமல் காவடி ஏந்துபவர் கள் கேட்க முடியும் என நம்பு கிறோம்," என்றார் திரு பிரித்தீவ்.

காவடிக்கான வழிபாட்டை திரு பிரித்தீவ் ராஜ் (வலது) நேற்று முன்தினம் தமது வீட்டில் நடத்தினார். காவடி உபகரணங்கள், அலகுகள் போன்றவற்றை முருகக் கடவுளுக்கு முன் வைத்து அவர் வணங்கினார். படம்: த. கவி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!