ஜெயலலிதா கூறியது நகைச்சுவை செய்தி: மு.க.ஸ்டாலின் கிண்டல்

சென்னை: கடந்த தேர்தலின்போது அதிமுக சார்பில் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருப்பதாக தமிழக முதல்வர் கூறியிருப்பது இந்தாண்டின் சிறந்த நகைச்சுவைச் செய்தி என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் கருணா நிதி தற்போது கொடுத்துள்ள உறுதி மொழிகள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும் என்றார். "தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேறியுள்ளது என்று முதல்வர் சொல்லியுள்ளார்.

ஆனால் மக்கள் அப்படிச் சொல்லவில்லை. "சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு தொடர்பான அண்மைய கருத்துக் கணிப்புகள் திமுகவுக்குச் சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் வரவேற்கமாட்டோம். விமர்சனமும் செய்யமாட்டோம்," என்றார் ஸ்டாலின். ஒட்டு மொத்த தமிழக மக்களும் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி விட்ட தாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் இந்த எண்ணம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறினார்.

"இருண்டு கிடந்த தமிழகத்தை ஒளியாக்கியுள்ளோம் என்று முதல்வர் கூறியுள்ளது தமிழகத்தை அல்ல. அவரது உறவினர்கள், சசிகலா குடும் பத்தினருக்குத்தான் அது பொருந்தும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி யுள்ளோம் என்று சொல்லியிருப்பது மிகுந்த நகைச்சுவைக்குரிய செய்தி. "தேர்தல் கூட்டணி பற்றி உரிய நேரத்தில் தெரிவிப்போம்.

ஹைதராபாத்தில் தலித் மாணவர் மரணத்துக்கு யார் காரணமோ, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!