பங்ளாதே‌ஷில் மீண்டும் தாக்குதல்; பெருநாள் தொழுகைத் திடல் அருகே குண்டு வெடிப்பு

பங்ளாதே‌ஷில் நேற்றும் ஒரு பயங் கரவாதத் தாக்குதல் நடத்தப்பட் டது. கிட்டத்தட்ட 200,000 பேர் ஒன்று கூடி நோன்புப் பெருநாள் தொழுகை நடத்திக்கொண்டிருந்த வேளையில் தொழுகை இடத்துக்கு அருகே குண்டு ஒன்று வெடித்தது. பங்ளாதே‌ஷின் வடக்குப் பகுதி யில் கிஷோர்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு திடலில் பெருநாள் தொழுகை நேற்றுக் காலை அமைதியாக நடந்துகொண்டு இருந்தது. அந்தப் பகுதியைப் பாதுகாப்பதற்காக ஏராள மான போலிசார் குவிக்கப்பட்டு இருந்தனர். காலை 9 மணியளவில் ஆயுதங் களோடு ஒரு கும்பல் அந்த இடத்தை நெருங்கியது. வெட்டுக் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் போலிஸ் பாதுகாப்புப் பகுதியை நெருங்கிய கும்பல் முதலில் போலிஸ் சாவடி மீது வெடிகுண்டு ஒன்றை வீசியதாக மாவட்ட துணை போலிஸ் அதிகாரி டோஃபஸல் ஹொசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குண்டு வெடித்த சில விநாடி களில் வெட்டுக்கத்தியால் போலி சாரை அக்கும்பல் தாக்கத் தொடங் கியதாகவும் பதிலுக்கு போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர் சொன்னார். தாக்குதல் நடத்திய கும்பலும் போலிசாரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டு சண்டையிட் டதை 'சோமொய்' என்னும் தனி யார் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. போலிஸ்காரர்களில் ஒருவரை கும்பல் வெட்டிக்கொன்றதாக அந்த தொலைக்காட்சி தெரிவித்தது. போலிஸ்காரர் மாண்டதை உறுதி செய்த மாவட்ட போலிஸ் கட்டுப் பாட்டு அறை அதிகாரி மஹ்புர் ரஹ்மான் அந்த போலிஸ் காரரின் பெயர் ஜஹுருல் ஹக், 30, என்றும் தொழுகை திடலிலிருந்து கிட்டத் தட்ட ஒரு கிலோ மீட்டர் தொலை வில் அவர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு இருந்ததாகவும் கூறினார். ஆனால், இந்தத் தாக்குதலும் துப்பாக்கிச்சூடும் பள்ளிக்கூடம் ஒன்றின் அருகே நடந்ததாகவும் பெருநாள் தொழுகைத் திடலின் அருகே நடக்கவில்லை என்றும் மாவட்ட நிர்வாக அதிகாரி அஸி முதின் பிஸ்வாஸ் ஏஎஃப் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!