பா.விஜய்: ஆவேசமான கதையில் நடிக்கிறேன்

பாடலாசிரியராக இருந்து நாயக னாக மாறிய கவிஞர் பா.விஜய் அடுத்து 'நையப்புடை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் 'நையப்புடை'. "நான் இயக்கி நடித்த 'ஸ்ட்ராபெர்ரி' படம் முடிந்த கையோடு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்னை அழைத்துப் பேசினார். அப்போது 'நையப்புடை' படம் குறித்து விவரித்தார். கதையைக் கேட்டு, அது பிடித்திருந்தால், இருவரும் இணைந்து நடிக்கலாம் என்றார். சரி என்று சொன்னேன். அவர் 'நெஞ்சிருக்கும் வரை' படத்தை இயக்கியபோதே என்னை நடிக்க அழைத்திருந்தார்.

ஆனால் அப்போது அதை ஏற்க முடியவில்லை. "என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் நடிக்க அழைத்தபோது மறுக்க முடியவில்லை. அதனால் கதையைக் கேட்டேன். ஆவேசமான கதை. ரொம்ப பிடித்திருந்தது. இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டேன். இதுதான் 'நையப்புடை' படத்துக் குள் நான் நுழைந்த கதை," என்கிறார் பா.விஜய். என்ன மாதிரியான கதை? "இது இரு நாயகர்கள் உள்ள கதை. நான் ஊடகவியலாளராக வருகிறேன். எஸ்.ஏ.சந்திரசேகர் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். இருவரும் சேர்ந்து சமுதா யத்துக்குத் தேவையான ஒரு விஷயத்தை செய்ய முயற்சிக் கிறோம். அது என்ன என்பதே கதை. ஒளிப்பதிவாளர் ஜீவனின் மகன் விஜயகிரண் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!