உலகளவில் ரவுடி பேபி பாடல் சாதனை

நடிகர் தனுஷின் ரவுடி பேபி பாடல் இந்தியாவில் முதல் இடத்திலும் உலக அளவில் ஏழாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘மாரி 2’.

இந்தப் படத்தில் தனுஷும் சாய்பல்லவியும் இணைந்து நடனமாடிய ‘ரவுடி பேபி’ பாடல் இணையத்தில் வெளியான நாள் முதல் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், பிரபுதேவா நடனம் அமைத்த இந்தப் பாடல் இதுவரை யுடியூபில் 71 கோடி பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

தற்போது, உலக அளவில் யுடியூப் வெளியிட்ட இந்த ஆண்டின் முதல் 10 பாடல் காணொளி பட்டிய லில் ஏழாவது இடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது இந்த ‘ரவுடி பேபி’ பாடல். அத்துடன் இந்தப் பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்தியப் பாடல் என்ற பெரு மையையும் இப்பாடல் பெற்றுள்ளது.

இந்த தகவலை நடிகர் தனுஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!