பதவி விலகினார் ஆம்லா

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகு வதாக ஹசிம் ஆம்லா, 32, அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி 'டிரா'வில் முடிந்ததைத் தொடர்ந்து உடனடியாக தமது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார் ஆம்லா.

இதையடுத்து, மீதமுள்ள இரு டெஸ்ட் போட்டிகளுக்கு ஏபி டி வில்லியர்ஸ் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். இவரே ஒருநாள் போட்டிகளுக்கான தென்னாப் பிரிக்க அணியின் தலைவராகவும் இருந்து வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி யின் தலைமைப் பொறுப்பேற்றார் ஆம்லா.

அவரது தலைமையின்கீழ் 14 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி நான்கு போட்டிகளில் வெற்றி, நான்கு போட்டிகளில் தோல்வி, ஆறு ஆட்டங்களில் 'டிரா' கண்டுள்ளது. ஸிம்பாப்வே, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர்களை ஆம்லா தலைமையில் தென்னாப்பிரிக்க அணி கைப் பற்றியது.

டெஸ்ட் போட்டிகளுக்கான தென்னாப்பிரிக்க அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய ஹசிம் ஆம்லா (வலது), புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏபி டி வில்லியர்ஸ். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!