மலேசியாவுக்கு மலாய் பேசும் ஐஎஸ்ஐஎஸ் பிரிவு

மலேசியாவுக்கு மலாய் பேசும் ஐஎஸ்ஐஎஸ் பிரிவு எச்சரிக்கை கோலாலம்பூர்: ஐஎஸ்ஐஎஸ் பயங் கரவாத அமைப்பைச் சேர்ந்த மலாய் பேசும் பிரிவினர் மலேசி யாவை கடுமையாக எச்சரித்துள் ளனர். ஐஎஸ்ஐஎஸ்க்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மலேசியா எடுத்துவரும் வேளையில் இந்த எச்சரிக்கை வெளியாகியிருக் கிறது. மலாய் மொழியில் வெளியிடப் பட்டுள்ள காணொளியில் மலேசியா-=இந்தோனீசிய பிரிவு, அதன் உறுப்பினர்கள் கைது செய் யப்பட்டதற்கு பழிவாங்கப் போவ தாக மிரட்டியது. 'மெசேஜ் அவாம் கெபாடா மலேசியா' (மலேசிய பொது மக்களுக்கு செய்தி) என்ற தலைப்பில் எச்சரிக்கை செய்தி இடம்பெற்றிருந்தது. "எங்களைப் பிடித்தால் எண்ணிக்கையில் அதிகரிப்போம்," என்று எச்சரித்த காணொளி, ஜனநாயக ஆட்சிகளுக்கு தலை வணங்கப்போவதில்லை என்று குறிப்பிட்டது. சுமார் ஒரு நிமிடத்துக்குமேல் நீடித்த காணொளியில் மலாய் மொழியில் தெளிவாக பேசிய ஒருவர், மலேசியாவை எச்சரித்தார்.

இதற்கிடையே சோமாலியாவின் அல்-ஷாபாப் போராளிக் குழுவின் கத்திபா சகோதரர்கள் என்ற பெயரில் மற்றொரு காணொளி வெளியானது. இதில் சிரியாவில் போரிடு வதற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. மற்றொரு நிலவரத்தில் பாரிஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர்கள் என்று சில புகைப்படங்களை ஐஎஸ் நேற்று வெளியிட்டது. அதில் ஒன்பது சந்தேக நபர் களின் படங்கள் காட்டப்பட்டன. அவர்களில் சிலர் மத்திய கிழக்கில் ராணுவப் பயிற்சிகளை நடத்திக் கொண்டிருப்பதை காணொளி காட்டியது. கடந்த நவம்பரில் பிரான்சின் தலைநகர் பாரிஸ் நகரில் துப்பாக் கிக்காரர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் 130 பேர் கொல்லப் பட்டனர்.

காணொளியில் அப்துல் ஹாலித் என்பவர் தெளிவாக மலாய் மொழியில் பேசினார். அவருக்கு அருகில் முஹமட் நிஸாம். படம்: தி ஸ்டார்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!