வெலிங்டன்: நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்கவிருக்கிறது.
இந்நிலையில், நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் நீல் வேக்னர் திடீரென அணியில் இருந்து விலகியிருக்கிறார். அவருடைய மனைவி முதல் குழந்தையை ஈன்றெடுக்க இருப்பதே அதற்குக் காரணம்.
இதையடுத்து, அவருக்குப் பதிலாக இன்னொரு வேகப் பந்து வீச்சாளரான மேட் ஹென்ரி அணியில் சேர்க்கப் பட்டுள்ளார்.
டிம் சௌத்தி, டிரென்ட் போல்ட், அறிமுக வீரர் கைல் ஜேமிசன் என ஏற்கெனவே நியூசிலாந்து அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால், ஹென்ரிக்கு விளையாட வாய்ப்பு கிட்டுவது அரிதுதான் எனச் சொல்லப் படுகிறது.