புதிய மாற்றங்களை அறிவித்தார் பிரதமர்

தமிழவேல்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி யினருக்குக் கூடுதல் வாய்ப்பு, குழுத் தொகுதிகளைக் குறைத்து தனித் தொகுதிகளைக் கூட்டு தல், தொகுதியில்லா உறுப்பினருக் கும் வாக்களிக்கும் உரிமை, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறையில் மாற்றங்கள் = இது போன்ற முக்கிய அரசியல் சாசன மாற்றங்களை பிரதமர் லீ சியன் லூங் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தொகுதியில்லா உறுப்பினர் களை உள்ளடக்கிய எதிர்க்கட்சி யினரின் எண்ணிக்கை அதிகரிக் கப்படவுள்ளது.

அத்துடன் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்களைப் போலவே தொகுதியில்லா உறுப்பினர்களுக் கும் வாக்களிக்கும் உரிமை களும் வழங்கப்படும். அடுத்த பொதுத்தேர்தலிலி ருந்து இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என்றும் அதற்கு ஏற்ப அரசியல் சாசனத் தில் மாற்றம் செய்யப்படும் என் றும் பிரதமர் லீ சியன் லூங் தெரி வித்தார். தொகுதியில்லா நாடாளு மன்ற உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை தற்போதுள்ள 9லிருந்து 12க்கு உயர்த்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!