சிங்கப்பூரின் கொள்கைகளுக்கு உலக நாடுகள் பாராட்டு

ஜெனி­வா­வில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற மனித உரிமை­கள் மன்றக் கூட்­டத்­தில் சிங்கப்­பூ­ரின் கொள்கை­கள் தொடர்­பான இரண்டா­வது அனைத்­து­லக மறு­ஆய்வு அறிக்கையை வெளி­யு­றவு அமைச்­சின் பொதுத்­தூ­தர் பேரா­சி­ரி­யர் சான் ஹெங் சீ சமர்ப்­பித்து உரை­யாற்­றினார். அவ­ரு­டன் அமைச்­சு­கள், அர­சாங்க அமைப்­பு­கள் ஆகிய வற்றின் 11 அதி­கா­ரி­கள் உடன் சென்ற­னர். இந்த மாநாட்­டில் 113 நாடுகள் உரை­யாற்­றின. சிங்கப்­பூர் கொள்கை­களில் பொதிந்­தி­ருக்­கும் தத்­து­வங்கள், ஆக்­க­பூர்வ அணு­கு­முறை­கள் பற்றி விளக்­கிய திரு­வாட்டி சான், சிங்கப்­பூர் சிறிய நாடாக இருந் தாலும் இன, சமய பன்­மு­கத் தன்மையைக் கருத்­தில்­கொண்டு அனைத்து சிங்கப்­பூ­ரர்­களுக்­கு­மான மனித உரிமையைப் பாது­காத்து வரு­கிறது என்றார்.

சமூகப் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை ஆகி­ய­வற்றை வலுப்­படுத்­தும் நோக்கில் முன்­னோ­டித் தலை­முறைத் தொகுப்­புத் திட்டம், 'ஸ்கில்ஸ்­ஃ­பி­யூச்­சர்', 'மெடி­‌ஷீல்ட் லைஃப்', அனைத்து வய­ தின­ருக்­கு­மான நாடு ஆகி­யவை அறி­மு­கப்­படுத்­தப்பட்டுள்­ளது குறித்­தும் அவர் விளக்­கினார். ஆசிய பசிபிக், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் ஆகிய வட்டார நாடுகள் மக்களின் நல்வாழ்வுக்கு முக் கியத்துவம் அளிக்கும் சிங்கப் பூரின் கொள்கைகளைப் பாராட் டிப் பேசின.

வெளி­யு­றவு அமைச்­சின் பொதுத்­தூ­தர் பேரா­சி­ரி­யர் சான் ஹெங் சீ. படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!