'ரெமோ' படத்தின் தலைப்பை மாற்றப்போவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் 'ரெமோ'. இதில் அவர் பெண் வேடத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். காதல் கதையுடன் உருவாகி யுள்ள இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். வருகிற அக்டோபர் 7ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் தலைப்பை படக்குழுவினர் மாற்ற உள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது. 'ரெமோ' என்ற தலைப்பு ஆங்கிலத்தில் அமைந்துள்ளதால் இப்படத்திற்காகத் தமிழக அரசு வழங்கும் கேளிக்கை வரி ரத்தாகும் என்ற அடிப்படையில் இப்படத்தின் தலைப்பை மாற்ற படக்குழுவினர் முடிவு செய்துள்ள தாகக் கூறப்படுகிறது. அதன்படி படத்திற்கு 'ரெங்கநாதன் என்கிற மோகனா' என்ற தலைப்பு வைக்கப் போவ தாகவும் கூறப்பட்டது. ஆனால், படக்குழு தரப்பில் விசாரிக்கை யில், படத்தின் தலைப்பை மாற்றப் போவதாக வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்று குறிப்பிட்டுள்ளனர். படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் 'ரெமோ' என்று வருமாம். அதற்காகவே இந்த தலைப்பை வைத்திருப்பதாகப் படக் குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
'ரெமோ' படத்தின் படப்பிடிப்பில் அப்படக் குழுவினர்.