ரவிகுமார்: மகிழ்ச்சியாக உள்ளது

சுதீப்பை வைத்து 'முடிஞ்சா இவன புடி' என்ற படத்தை இயக்கி வருகிறார் கே.எஸ். ரவிகுமார். 'தங்கமகன்' படத்தில் சாந்தமான தந்தை வேடத்தில் நடித்த பிறகு பாராட்டுகள் குவிகின்றனவாம். "தந்தை வேடத்தில் நடிக்க வேண் டும் என இருமுறை என்னிடம் கேட்டுக் கொண்டார் தனுஷ்.

'நீங்கள் முரட்டுத் தனமான மனிதர் என்று பலரும் நினைக்கிறார்கள். அதற்காகவேனும் நீங்கள் சாந்தமான, அமைதியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். தந்தை வேடம் உங்களுக்கு கச்சித மாகப் பொருந்தும்' என்று சொன்னார். எனக்கும் அது சரியெனப்பட்டது. தனு‌ஷுக்காகவே அந்த வேடத்தில் நடித்தேன். "இப்போது எல்லோருமே 'அவருக் குள் இப்படியொரு மென்மையான மனசா?' எனப் பாராட்டுகிறார்கள். அதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது," என்கிறார் ரவிகுமார்.

'தங்கமகன்' படத்தில் தனுஷ், சமந்தா, ராதிகா, கே.எஸ். ரவிகுமார்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!