சீனாவில் 36 நாட்களுக்குப் பிறகு 4 சுரங்க ஊழியர்கள் உயிருடன் மீட்பு

பெய்ஜிங்; சீனாவில் கடந்த மாதம் ஒரு சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுரங்கத்தினுள் சிக்கியிருந்த நான்கு ஊழியர்கள் விபத்து நிகழ்ந்த 36 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சுரங்கத்தினுள் சுமார் 200 மீட்டர் ஆழத்தில் சிக்கித் தவித்த நான்கு ஊழியர்களை மீட்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை மிகுந்த சிரமப்பட்டு வெளியில் கொண்டுவந்தனர். சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷண்டோங் மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கம் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி சரிந்து விழுந்தது. அப்போது 29 சுரங்க ஊழியர்கள் சுரங்கத்தினுள் இருந்தனர். அந்த விபத்தைத் தொடர்ந்து மறுநாள் 11 ஊழியர்கள் காப்பாற்றப்பட்டனர்.

அந்த விபத்தில் ஒருவர் மரணம் அடைந்ததாக அறிவிக் கப்பட்டது. இந்நிலையில் 36 நாட்களுக்குப் பிறகு நால்வர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அந்த நால்வர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மீட்புக் குழுவின ருக்கு தெரியவந்தது. பின்னர் ஜனவரி 8ஆம் தேதி அந்த ஊழியர்களுடன் மீட்புக் குழுவினர் தொடர்புகொள்ள முடிந்தது. அதன் பிறகு உணவு, துணிமணிகள், விளக்குகள் போன்றவை சுரங்கம் வழியாக ஊழியர்களுக்கு அனுப்பி வைக் கப்பட்டது. இருப்பினும் சுரங்க ஊழியர் களை பாதுகாப்பாக வெளியில் கொண்டுவர மீட்புக் குழுவினர் மிகுந்த சிரமப்பட்டதாகவும் சுரங்கத்தினுள் கற்கள் விழுந்து கொண்டே இருந்ததால் எந்த நேரத்திலும் சுரங்கத்தின் சுவர்கள் சரியக்கூடும் என்று அஞ்சப் பட்டதாகவும் அதிகாரிகள் கூறி னர்.

சீனாவில் உள்ள ஒரு சுரங்கத்தினுள் கடந்த 36 நாட்களாக சிக்கியிருந்த நான்கு ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அந்த நால்வரில் முதலில் ஒரு ஊழியர் (நடுவில்) வெளியில் கொண்டுவரப்பட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர். ஒவ்வொருவராக அந்த நால்வரையும் மீட்புக் குழுவினர் வெளியில் கொண்டுவந்தனர். சீனாவின் ஷண்டோங் மாநிலத்தில் உள்ள அந்த சுரங்கம் சென்ற மாதம் 25ஆம் தேதி சரிந்து விழுந்தது. இப்போது காப்பாற்றப்பட்ட நால்வரையும் சேர்த்து மொத்தம் 15 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இன்னும் 13 பேரை காணவில்லை. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!