வீடு தீப்பிடித்து எரிவதாகச் சொன்னாலும் ‘அம்மா’ புராணம் மட்டுமே

ராணிப்பேட்டை: தமிழக அரசு புதிதாக அமைத்துள்ள 'அம்மா சேவை மையங்கள்' அனைத்தும் முதல்வர் ஜெயலலிதா புராணம் பாடும் மையங்களாகவே செயல்பட்டு வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய தாகக் கூறினார். மக்கள் பிரச்சினைகளுக்கு அதிமுக அரசு தீர்வு காணவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், அதி முக ஆட்சிக்கு மக்கள் நிச்சயம் முடிவுகட்டுவர் என நம்பிக்கை தெரிவித்தார்.

"கடந்த ஐந்து ஆண்டு ஆட்சிக் காலத்தில் எந்தவொரு சாதனையும் புரிந்ததாக அதிமுக வால் சொல்லமுடியாது. ஏனெ னில், ஐந்து ஆண்டு காலமும் சாதனைகளை விட குற்றங்கள் தான் அதிகம். இப்போது தமிழக அரசின் எல்லா திட்டங்களுக்கும் 'அம்மா'வின் பெயர் தான் சூட்டப் படுகிறது. இதனால் மக்கள் வெறுப்பில் உள்ளனர். "தமிழக அரசின் சின்னத்தில் ஒரு கோபுரம் இடம்பெற்றிருக்கும். ஆனால் தற்போதைய ஆட்சியாளர் கள் அப்படி ஒரு கோபுரம் இருப்ப தையே மறந்துவிட்டனர்," என்றார் குஷ்பு. அதிமுகவினர் தமிழக அரசின் சின்னத்தை எல்லா இடங்களிலும் மறைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், அனைத்து அரசு விளம்பரங்களிலும் முதல்வர் ஜெயலலிதா படம் மட்டுமே இடம் பெறுவதாகக் கூறினார்.

"இன்று தண்ணீருக்கும் உணவகத்திற்கும் கரும்பிற்கும் என எல்லாவற்றிலும் அம்மா படம் தான் ஒட்டப்படுகிறது. இது போதாதென்று 'அம்மா சேவை மையம்' என்ற திட்டத்தையும் துவங்கி உள்ளனர். "யாராவது தங்கள் வீடு தீப் பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது என இந்தச் சேவை மையத்தை தொடர்பு கொண்டால், 'அம்மா' வின் புராணம் பாடிய பிறகுதான் சேவை மைய ஊழியர்கள் குறை களைக் கேட்கிறார்கள். இது உண்மையிலேயே மக்கள் சேவை மையம் அல்ல; அம்மாவின் புகழ்பாடும் சேவை மையம்," என்று குஷ்பு மேலும் விமர்சித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!