வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இடம் ஒதுக்க பல்கலைக்கு உத்தரவு

சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இளநிலை கட்டடக்கலை படிப்பில் 15 விழுக்காடு இடம் ஒதுக்க அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தொடுத்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்தது.

உயர் நீதிமன்றத்தில் மாணவி ஷிவானி அருண் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இளநிலை கட்டடக்கலை படிப்பில் (பி.ஆர்க்) 15 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கவேண்டும். இதன்படி கிண்டியில் உள்ள ஆர்க்கிடெக்சர் கல்லூரியில் படிக்க விரும்பினேன். ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதித்து உத்தரவிடவில்லை என்று கூறப்பட்டது. இதனால், இணையம் வழியாக ‘பி.ஆர்க்’ படிப்பில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இடஒதுக்கீடு வழங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடவேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், “வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 15 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் வழங்க வேண்டுமா? அல்லது கூடுதலாக வழங்க வேண்டுமா? என்பதை டெல்லியில் உள்ள இந்திய கட்டடக்கலை மன்றம் அறிவிக்கவில்லை. அதனால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை,” என்றார்.

ஆனால், அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்களில் 15 விழுக்காடு இடஒதுக்கீட்டை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்க வேண்டும் என்று கடந்த 2013ஆம் ஆண்டே அனைத்து கல்லூரி களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று கட்டடக்கலை மன்றம் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ், “கட்டடக்கலை மன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ‘பி.ஆர்க்’ படிப்பில் 15 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி அண்ணா பல்கலைக்கழகம் இரண்டு வாரத்துக்குள் அறிவிப்பாணை வெளியிடவேண்டும்,” என்று உத்தரவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!