ஓராண்டு முதல்வர் திட்டம்: விஜயகாந்த் புதிய யோசனை

சென்னை: சட்டப்பேரவைத் தேர்த லில் வெற்றிபெறும் பட்சத்தில் ஓராண்டு காலம் தனக்கு முதல்வர் பதவியை விட்டுத்தர வேண் டும் என திமுக தலைமையிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிபந்தனையை ஏற்கும் பட்சத்தில் திமுக கூட்டணியில் இடம்பெறத் தயார் என விஜய காந்த் கூறியதாகவும் இதை யடுத்து அவரது இந்த நிபந்தனை குறித்து திமுக தரப்பில் தீவிர மாகப் பரிசீலிக்கப்பட்டு வருவ தாகவும் பிரபல தமிழக நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இம்முறை தேமுதிகவை தங் கள் வசம் இழுக்கவேண்டும் என திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி எனப் பல தரப்பிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இது தொடர்பாக திரை மறைவு அரசியல் பேரங்களும் நடைபெற்று வருகின்றன. எனினும் எத்தரப்புக்கும் பிடி கொடுக்காத விஜயகாந்த், கட்சி மாநாட்டை நடத்தி தொண்டர் களிடமும் நிர்வாகிகளிடமும் கருத்து கேட்ட பிறகே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். எனினும் திரைமறைவு பேரங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!