இந்தியா: போரைத் தவிர்க்க சீனா தந்திரம்

லடாக் எல்­லைப் பகு­தி­யில் நேரடி மோத­லில் ஈடு­ப­டா­மல் இந்­திய ராணு­வத்தை திசைதிருப்பும் தந்­திர முறையை சீனா கையாள்­வது தெரி­ய­வந்­துள்­ளது.

அண்­மைய சில மாதங்­க­ளாக இந்­திய, சீனா இடையே எல்­லை­யில் மோதல் வலுத்து வரு­கிறது. இதில் உயி­ரி­ழப்­பு­களும் ஏற்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில் லடாக் பகு­தி­யில் உள்ள முக்­கிய மலை முக­டு­களை இந்­திய ராணு­வம் தனது கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­துள்­ளது. இத­னால் சீன ராணு­வத்­தின் அடுத்­த­கட்ட நகர்­வு­களை இந்­திய ராணு­வத்­தால் உன்­னிப்­பா­கக் கவ­னித்து பதில் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முடி­யும்.

இந்­நி­லை­யில் நேர­டி­யாக சண்­டை­யி­டா­மல் இந்­திய வீரர்­களை மன­த­ள­வில் நிலை­கு­லைய வைப்­பது, இந்­திய அர­சின் மீது வீரர்­க­ளுக்கு அதி­ருப்தி ஏற்­ப­டச் செய்­வது போன்ற ­தந்­திர முறை­களை சீனா பின்­பற்­று­வ­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிது.

பாங்­காங் தென்­க­ரை­யில் சீன ராணு­வத்­தி­னர் ஏரா­ள­மான ஒலி­பெருக்­கி­களை வைத்து தெளி­வான இந்­தி­யில் சில அறி­விப்­பு­களை ஒலிக்­கச் செய்­கின்­ற­னர்.

அடுத்து வரும் குளிர்­கா­லத்­தில் லடாக்­கில் உள்ள மலை­மு­க­டு­களை பனி சூழ்ந்­தி­ருக்­கும் என்­றும் அத்­த­கைய கடி­ன­மான பரு­வ­நி­லை­களை இந்­திய வீரர்­கள் எதிர்­கொள்ள வேண்டி இருக்­கும் என்­றும் அந்த அறி­விப்­பு­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­திய அர­சி­யல்­வா­தி­க­ளின் விருப்­பங்­களை நிறை­வேற்­று­வ­தற்­காக இந்­திய வீரர்­கள் இந்­தப் பய­னற்ற நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட வேண்டி இருக்­கும் என்­றும் குளிர்­கா­லத்­தில் தேவைப்­படும் சூடான உணவு, அத்­தி­யா­வ­சி­யத் தள­வா­டங்­கள் ஆகி­யவை கிடைக்­கா­மல் திண்­டாட வேண்டி இருக்­கும் எனும் அறி­விப்­பு­க­ளை­யும் ஒலி­பெ­ருக்­கி­கள் மூலம் இந்­திய வீரர்­க­ளின் காது­களை எட்­டும் வகை­யில் சீன ராணு­வம் அறி­வித்து வரு­கிறது.

கடந்த 1962, ஆம் ஆண்­டும் பின்­னர் 1967ஆம் ஆண்­டி­லும் எல்­லை­யில் மோதல் நிகழ்ந்­த­போது இதே தந்­தி­ரங்­க­ளைத்­தான் சீனா கையாண்­டது என்று இந்­திய ராணு­வத்­தின் முன்­னாள் தள­பதி தெரி­வித்­த­தாக ஊட­கம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இம்­முறை சீன ராணு­வம் எல்­லை­யில் பஞ்­சாபி பாடல்­க­ளை­யும் ஒலிக்­கச் செய்­கிறது.

ஒரு­வேளை பஞ்­சா­பில் இருந்து வந்­துள்ள இந்­திய துருப்­பு­கள் லடாக் அருகே உள்ள மலை முக­டு­களை கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­தி­ருப்­ப­தாக சீனத் தரப்பு நினைத்­தி­ருக்­க­லாம் என்­றும் முன்­னாள் தள­பதி குறிப்­பிட்­ட­தாக ஊட­கச் செய்தி மேலும் தெரி­விக்­கிறது.

முழுப் போருக்குத் தயார்

புது­டெல்லி: கிழக்கு லடாக்கில் சீனாவுடன் முழு அளவிலான போருக்குத் தயாராக இருப்பதாக இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்கள் குளிர்காலத்தில் நடக்கும் போர் தொடர்பாக பெரும் அனுபவம் கொண்டுள்ளதாகவும் குறுகிய கால அறிவிப்பு என்றாலும் முழு வீச்சில் செயல்பட உளவியல் ரீதியில் தயாராக உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!