'இணையப் பாதுகாப்பு ஆற்றல்களை வலுப்படுத்த புத்தாக்கம் முக்கியம்'

சிங்­கப்­பூ­ரின் இணை­யப் பாது­காப்பு ஆற்­றல்­களை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு ஆராய்ச்­சி­யும் புத்­தாக்­க­மும் மிக முக்­கி­யம் என்று கூறி­யுள்­ளார் தொடர்பு, தக­வல் மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி.

அத்­த­கைய முயற்­சி­களை சிங்­கப்­பூர் தீவி­ரப்­ப­டுத்தி வரு­வ­தா­கக் கூறிய டாக்­டர் ஜனில், புதி­தா­கத் தொடங்­க­வுள்ள ஓர் ஒத்­து­ழைப்­புத் திட்­டம் குறித்­தும் அறி­வித்­தார்.

சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு அமைப்­புக்­கும் இஸ்­‌ரே­லின் டெல் அவிவ் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்­கும் இடை­யி­லான இந்த கூட்டு மானி­யத் திட்­டம், தேசிய இணை­யப் பாது­காப்பு ஆய்வு மேம்­பாட்­டுத் திட்­டத்­தின்­கீழ் தொடங்­கப்­பட்­டு உள்­ளது.

மானி­யத் திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூ­ரின் ஆய்­வா­ளர்­கள் தங்­க­ளின் பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து, அறி­வார்ந்த தேசங்­க­ளுக்­கான பாது­காப்பு, பொருள் சாத­னங்­க­ளின் இணை­யம் போன்ற சவால்­மிக்க அம்­சங்­க­ளைக் கையாள்­வர்.

உயர்­கல்­விக்­கான உள்­ளூர்க் கழ­கங்­கள் மற்­றும் ஆராய்ச்­சிக் கழ­கங்­க­ளைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் இந்த மானி­யத் திட்­டத்­திற்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேசிய இணை­யப் பாது­காப்பு ஆய்வு மேம்­பாட்­டுத் திட்­டத்­திற்கு சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு அமைப்பு பொறுப்­பேற்­கும்.

இதன் மூலம் அர­சாங்க அமைப்பு­கள், தொழில்­து­றை­கள் மற்­றும் கல்­வி­யா­ளர்­கள் மேலும் சுமு­க­மாக ஒருங்­கி­ணைந்து செயல்­ப­ட­லாம் என்­பது நோக்­க­மா­கும்.

“இன்­றைய இணை­யச் சவால்­களை சமா­ளிப்­ப­தற்கு இடையே, நாளைய இணைய மிரட்­டல்­க­ளுக்­குத் தயா­ரா­வ­தும் முக்­கி­ய­மா­கும்,” என்று சேன்ட்ஸ் எக்ஸ்போ மற்­றும் மாநாட்டு மையத்­தில் நடந்த நிகழ்­வில் அமைச்­சர் ஜனில் குறிப்­பிட்­டார்.

புதிய தொழில்­நுட்­பங்­கள் உரு­வாகி வரு­வ­தால் பற்­பல நல்ல வேலை­வாய்ப்­பு­களும் உரு­வா­கும் என்­றார் அவர்.

பொருள் சாத­னங்­க­ளின் இணை­யம் குறித்­துப் பேசிய டாக்­டர் ஜனில், அவற்­றின் பாது­காப்பு இரட்­டிப்­பாக வேண்­டு­வ­தன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­னார். இத்­த­கைய சாத­னங்­கள் தற்­போது உல­கில் 31 பில்­லி­யன் உள்­ளன.

ஆனால் 2030ஆம் ஆண்­டுக்­குள் அந்த எண்­ணிக்கை 75 பில்­லி­ய­னா­க­லாம்.

இச்­சா­த­னங்­கள் மூலம் இணைப்­பாற்­றல் அதி­க­ரிக்­கும். ஆனால் மேலும் பெரிய அபா­யங்­களும் உரு­வா­கக்­கூ­டும் என்று அமைச்­சர் ஜனில் எச்சரித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!