'என்.ஹெச் 10' படத்தின் தமிழ் மறுபதிப்பில் அனுஷ்கா சர்மா கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. இந்தியில் நவ்தீப் சிங் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடித்து வெற்றி பெற்ற படம் 'என்.ஹெச் 10'. இப்படத்தை 6 பேர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் தமிழில் மறுபதிப்பு செய்யப்படுகிறது. இதில் அனுஷ்கா சர்மா கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. இந்த மறுபதிப்பை புதுமுக இயக்குநர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் முறையாக அறிவிக்க இருக்கிறது படக்குழு.
இந்திப் படத்தின் மறுபதிப்பில் திரிஷா
16 Oct 2016 06:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Oct 2016 08:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!