திமுகவின் பிரசார வியூகம்

சென்னை: தமிழகத்தில் மூன்று தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட திமுக வியூகம் வகுத்துள் ளது. அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், "மூன்று தொகுதிகளிலும் சட்டம், ஒழுங்கு உட்பட மக்கள் பிரச்சினைகளை முன் வைத்துத் திமுக பிரசாரத்தில் ஈடுபடும்," என்றார்.

"தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் கண்டிப்பாக திமுகதான் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக் கிறது," என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். இதற்கிடையே மூன்று தொகுதி களில் போட்டியிடும் வேட்பாளர் களின் பெயர்களை திமுக தலைமை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அரவக்குறிச்சி தொகுதியில் ஏற்கெனவே நிறுத்தப்பட்ட கே.சி. பழனிச்சாமி மீண்டும் போட்டியிடுவார் என்றும் தஞ்சை தொகுதியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அஞ் சுகம் பூபதிக்கு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது என்றும் திமுக அறி வித்தது. திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மூன்று வேட் பாளர்களும் திமுக தலைவர் கருணாநிதியையும் பொருளாளர் மு.க. ஸ்டாலினையையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

முன்னதாக திமுக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் விருப்ப மனு அளித்தவர்களிடம் கேள்வி கேட்டு விளக்கம் பெற்ற னர். மூன்று தொகுதிகளுக்கும் மொத்தம் 23 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!