500 வேலையிடங்களில் சோதனை

வேலையிடப் பாதுகாப்பு தொடர் பாக அடுத்த நான்கு வாரங் களில் 500க்கும் அதிகமான வேலையிடங்களில் மனிதவள அமைச்சு அதிரடி சோதனை மேற் கொள்ளவிருக்கிறது. இவ்வாண்டு வேலையிடங் களில் நிகழ்ந்த விபத்துகளில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந் ததை அடுத்து இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது. இடர் மதிப்பீடுகள் முறையாக அமல்படுத்தப்படாதது, மேலிருந்து கீழே விழாமல் தடுப்பதற்கான திட்டங்கள் இல்லாதது, பாதுகாப் பில்லாத வேலை நடைமுறைகள் போன்றவை அந்த மரணங்களுக் குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

தெம்பனிசில் கடந்த மாதம் 29ஆம் தேதி வேலையிடத்தில் அகழ்பொறி ஒன்று தலைக்குப்புறக் கவிழ்ந்ததில் 39 வயது நிரம்பிய சீன நாட்டவர் மாண்டுபோனார். உடலில் பல காயங்களுடன் சாங்கி பொது மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, மேற்பார்வை நடைமுறைகள், ஊழியர் பயிற்சி, இடர் மதிப்பீடு போன்றவை தொடர்பில் ஐநூற்றுக்கும் அதிக மான வேலையிடங்களில் மனித வள அமைச்சின் ஆய்வாளர்கள் திடீர் சோதனை மேற்கொள்வர் என்று அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!