‘சால்மோனெல்லா’; சாலட் கீரைகள் மீட்பு

ஆஸ்திரேலியாவிலிருந்து தருவிக்கப்பட்டு சிங்கப்பூரில் விற்கப்படும் 'வாஷ் அன் டாஸ்' என்று அழைக்கப்படும் சாலட் கீரைகள் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் சால்மோனெல்லா கிருமி இருப்பதாக நேற்று வெளி யிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித் தது. 'வாஷ் அன் டாஸ்' கீரைகளை ஆஸ்திரேலியாவின் 'டிரைபோட் ஃபார்மர்ஸ்' உற்பத்தி செய்து வரு கிறது. இம்மாதம் 14ஆம் தேதி வரை பயன்படுத்தப்படும் சாலட் கீரைப் பொட்டலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இவற்றை வாங்கிய வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும் ஆணையம் அறிவுறுத்தியது.

வாட்டர்கிரஸ், சோரெல், பேபி காஸ், பேபி ஸ்பினாச், சாலட் மிக்ஸ், வைல்ட் ராக்கெட் ஆகியவையும் மீட்டுக் கொள்ளப்பட்டவைகளில் அடங்கும். முன்னதாக குறிப்பிட்ட காலத் தில் தயாரிக்கப்பட்ட உல்வர்த்ஸ், வாஷ் அன் டாஸ், கோல்ஸ், சுப்பா சாலட், கிளியர் ஃபிளிம் போன்ற பெயர்களைக் கொண்ட சாலட் கீரைகளில் சால்மோனெல்லா கலந்திருப்பதால் மீட்டுக் கொள்ளப் படுவதாக ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து உணவுத் தர அமைப்பு குறிப்பிட்டது. இதில் 'வாஷ் அன் டாஸ்' சாலட் கீரைகள் சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்பட்டு விற் பனை செய்யப்படுகிறது. இதன் தொடர்பில், ஆணையம் இந்த சாலட் கீரைகளைச் சந்தையி லிருந்து மீட்டுக் கொள்ள உத்தர விட்டது. இதனை மீட்டுக் கொள்ளும் பணி தற்போது முற்றுப்பெற்று உள்ளதாகவும் ஆணையம் தெரி வித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!