ராமதாஸ்: ஜெயாவுக்காக மக்கள் அவதிப்படுவதை ஏற்க முடியாது

சென்னை: மக்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட பாலங்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்காகத் திறக்கப் படாமல் இருப்பது கண்டனத்துக்கு ரியது என பாமக நிறுவனர் ராம தாஸ் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கை ஒன்றில், ஜெய லலிதா எப்போது மருத்துவமனை யில் இருந்து வீடு திரும்புவார் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், அவருக்காக அனைத்து மக்களும் அவதிப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

“சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளில் போக்கு வரத்து நெரிசலைக் குறைப்பதற் காக மேம்பாலங்கள் கட்டி முடிக் கப்பட்டு விட்டாலும், ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற கதையாக அவை இன்னும் போக்குவரத்துக்கு திறந்து விடப்படவில்லை. “முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று வீடு திரும்பிய பின்னர் அவரது கைகளால் தான் திறக்கப்பட வேண்டும் என்பதற்கா கவே இவை முடக்கி வைக்கப் பட்டுள்ளன,” என ராமதாஸ் கூறியுள்ளார்.

Loading...
Load next