கடந்த சில முக்கிய காற்பந்து போட்டிகளில் அரைஇறுதி சுற்றிலிருந்து இறுதி ஆட்டத்திற்கு முன்னேற சிரமங்களை எதிர்கொண்ட மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்து குழு இம்முறை யூரோப்பா லீக் கிண்ண இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது.
இன்று அதிகாலை (மே 7ஆம் தேதி) நடந்த யூரோப்பா லீக் கிண்ண அரைஇறுதி சுற்றின் இரண்டாம் ஆட்டத்தில் அது 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலிய ரோமா அணியிடம் தோல்வி கண்டது.
இருப்பினும், அரை இறுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் அதன் சொந்த அரங்கில் 6-2 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அபார வெற்றி கண்டதால், 8-5 என்ற மொத்த கோல் கணக்கில் அடிப்படையில் போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறுகிறது.
இம்மாதம் 26ஆம் தேதி நடக்கவிருக்கும் யூரோப்பா லீக் கிண்ண இறுதி ஆட்டத்தில் அது ஸ்பானிய குழுவான விலாரேல் குழுவுடன் பொருதவுள்ளது.
போட்டியின் அரைஇறுதி சுற்றில் விலாரேல் இங்கிலாந்தின் ஆர்சனல் குழுவை வீழ்த்தியது.
வரும் 26ஆம் தேதி, மான்செஸ்டர் குழு இடம்பெறும் எட்டாவது முக்கிய ஐரோப்பிய காற்பந்து போட்டிகளின் இறுதி சுற்று ஆட்டமாகும்.
யூரோப்பா லீக் கிண்ண இறுதி ஆட்டம் போலந்தின் கடான்ஸ்க் அரினா காற்பந்து அரங்கில் நடக்கவுள்ளது. சிங்கப்பூர் நேரப்படி, 27ஆம் தேதி, அதிகாலை 3 மணிக்கு இந்த ஆட்டம் விளையாடப்படும்.