தைவான் நிலநடுக்கம்

தைனான்: தைவானில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் அடுக்குமாடிக் கட்டடம் சரிந்து விழுந்ததில் இன்னமும் 130 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது. இது, முன்பு மதிப்பிட்ட எண்ணிக்கையைவிட அதிகம் என்று உள்ளூர் அரசாங்க அதி காரி ஒருவர் கூறினார். தைனானின் 17 மாடி கட்டடத் தின் இடிபாடுகளில் உயிர் பிழைத் தவர்களைக் கண்டுபிடிப்பதற் காக மோப்ப நாய்களையும் நவீன சாதனங்களையும் மீட்புக்குழு வினர் பயன்படுத்தி வருகின்றனர். இடிபாடுகளில் உள்ள 29 பேரை எளிதாக மீட்டுவிட முடியும் என்றும் எஞ்சியவர்கள் மிகவும் ஆழமான இடத்தில் சிக்கியிருக் கின்றனர் என்றும் தைனான் நகர அரசாங்க அதிகாரி தெரிவித்தார்.

இந்தப் பேரிடரில் இதுவரை 18 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 15 பேர் சரிந்துகிடந்த அடுக்கு மாடிக் கட்டடத்தில் சிக்கி உயிர் இழந்தவர்கள். இதற்கிடையே 1990ல் கட்டப் பட்ட அடுக்குமாடிக் கட்டடத்தின் தரம் குறித்து கேள்வி எழுந்து ள்ளது. தரம் குறைந்த உலோகங்களின் இணைப்பு, சிமெண்ட் போன்ற காரணங்களால் வர்த்தக, குடி யிருப்புக் கட்டடத்தின் கட்டட அமைப்புக்கு பாதிப்பு ஏற்பட்டிருக் கலாம் என்று அந்தக் கட்டடத்தின் இடிபாடுகள் காட்டுவதாக தைனான் நகர அரசாங்க துணை தலைமை செயலாளர் லியூ ‌ஷி=சுங் தெரிவித்தார். இருப்பினும் மோசமான கட்டுமானம்தான் காரணம் என்று இப்போது உறுதிப்படுத்த முடியாது என்றார் அவர். சீனப் புத்தாண்டு விடுமுறை தொடங்குவதற்கு முன்பு சனிக் கிழமை அதிகாலை 4.00 மணிக்கு 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தைனான் நகரை உலுக்கியது.

இதில் அந்த நகரில் இருந்த பல கட்டடங்கள் மளமளவென சரிந்து விழுந்தன. நேற்று இரண்டாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடை பெற்றன. இதுவரை இடிபாடுகளிலிருந்து 350 பேர் வரை உயிருடன் மீட்கப் பட்டுள்ளனர். ஏறக்குறைய 500 பேர் காயம் அடைந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களில் பச்சிளம் குழந் தையும் ஒன்று என்று அதிகாரி ஒருவர் கூறினார். இந்நிலையில் மக்களை மீட்கும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப் படும் என தைவான் அதிபர் தெரி வித்தார். இந்த மீட்புப் பணியில் 800க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்தவர்களுக்கு தற் காலிக முகாம்களும் அமைக்கப் பட்டுள்ளன. நேற்று முன்தினம் இடிந்து விழுந்த அடுக்கு மாடிக் கட்டடத் திலிருந்து இளையர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அந்த இருபது வயது நபர் ஹுவாங் குவாங்=வெய் என்று தைவானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதே கட்டடத்தில் சிக்கிய 24 வயது மகளுக்காகக் காத்திருக் கும் திருமதி சாங், 42, "என்னு டைய தொலைபேசி அழைப்பு களுக்கு அவளிடமிருந்து பதில் வரவில்லை. என்னை மனதளவில் வலுப்படுத்தி வருகிறேன்," என்றார்.

நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணி நேரத்துக்குப் பிறகு கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிர் பிழைத்த ஒருவரை மீட்புக் குழுவினர் மேலே கொண்டு வந்தனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!