நடிப்பை மட்டுமே நம்பும் சாந்தினி

சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போது பா.விஜய் ஜோடியாக 'நையப்புடை', ஹரிஷ் கல்யாணுடன் 'வில் அம்பு', மற்றும் 'என்னோடு விளையாடு' உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார் சாந்தினி. "நான் சென்னைப் பெண். தமிழ்ப் படங்களில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்ற லட்சியத்துடன் நடிக்க வந்தேன். பாக்கியராஜ் சார் படத்தில் அறிமுகமானதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்றாலும் உடனடியாக அதற்குப் பலன் கிடைக்கவில்லை.

"கவர்ச்சியைவிட திறமையான நடிகை என்று பெயர் வாங்குவதையே நான் விரும்புகிறேன். இப்போது நடித்துவரும் படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. அவை வெளியான பிறகு, எனது திறமைக்கு மேலும் பல வாய்ப்புகள் தேடிவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. "இன்றைய ரசிகர்களின் ரசிப்புத்தன்மை மிகவும் வளர்ந்திருக்கிறது. கவர்ச்சியைவிட சிறந்த நடிப்பையே விரும்புகிறார்கள். கதைக்குத் தகுந்த கவர்ச்சி தேவை என்றாலும் சிறந்த நடிப்புதான் நிலையான இடத்தைத் தரும். எனவே நான் கவர்ச்சியைவிட நடிப்பையே அதிகம் நம்புகிறேன். ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் என்னை உயர்த்தும்," என்கிறார் சாந்தினி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!