ஜெர்மனியில் இரு ரயில்கள் மோதல்: எண்மர் பலி

பெர்லின்: ஜெர்மனியின் பவேரியா பகுதியில் நேற்று இரண்டு பய­ணி­கள் ரயில்­கள் நேருக்கு நேர் மோதிக்­கொண்ட விபத்­தில் குறைந்தது எண்மர் பலியான­தாக முதல்­கட்ட தக­வல்­கள் வெளியாகி உள்ளன. அந்த விபத்­துக்­கான காரணம் பற்றி இன்னமும் சரியாகத் தெரி­ய­வ­ராத நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வரு­வ­தா­க உள்ளூர் ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டு உள்­ளன. "100 பேர் காயமடைந்துள்ளனர். பலர் படுகாயமைந்துள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர்," என்று போலிஸ் தரப்புப் பேச்சாளர் கூறியுள்ளார். உள்ளூர் நேரப்படி காலை மணி 6.48க்கு ஜெர்மனியின் தென் கிழக்கு மூலையில் இருக்கும் பாட் ஐபிலிங் என்ற ஊரில் அந்த விபத்து நடந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!