மீண்டும் சுந்தர்.சி. படத்தில் பூனம்

சுந்தர்.சி. இயக்கத்தில் வெளிவந்த 'ஆம்பள' படத்தில் பூனம் பஜ்வா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, சுந்தர்.சி இயக்கிய 'அரண்மனை 2' படத்தில் பூனம் பஜ்வாவுக்கு முக்கிய கதாபாத்திரம் ஒதுக்கப்பட்டது. இந்தப் படத்தில் சுந்தர்.சி.க்கு ஜோடியாகவே பூனம் பஜ்வா நடித்திருந்தார். இதையடுத்து, சுந்தர்.சி. நடிக்க உள்ள புதிய படத்திலும் பூனம் பஜ்வா அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். மலையாளத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற 'வெள்ளிமூங்கா' படத்தை தமிழில் மறுபதிப்பு செய்ய உள்ளனர். இதில்தான் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடிக்கிறார் பூனம் பஜ்வா.

இப்படத்தை சுந்தர்.சியின் உதவியாளர் வெங்கட் என்பவர் இயக்குகிறார். இதில் நடிப்பதோடு, தயாரிப்பு பணியையும் சுந்தர்.சி மேற்கொள்ள இருக்கிறார். மார்ச் 11ஆம் தேதி திருநெல்வேலியில் படப் பிடிப்பு தொடங்குகிறது. சித்தார்த் விபின் இசையமைக்க உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!