சிறையை தகர்க்க திட்டமிட்ட 97 போராளிகள் கைது

பாகிஸ்தானில் சிறையை உடைத்து பயங்கரவாதி ஒருவ ரை விடுவிக்கத் திட்டமிட்ட 97 போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட திடீர் சோதனைகளில் இவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசா ரணையில் பாகிஸ்தானின் ஹைதராபாத் மத்திய சிறையைத் தகர்க்க அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. 2002ஆம் ஆண்டு 'வால் ஸ்திரீட்' சஞ்சிகையின் டேனியல் பேர்ல் என்பவரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் காலித் ஒமர் ஷேக் என்பவரை விடு விப்பது அந்த போராளிக் குழுக்களின் திட்டமாக இருந்தது என நேற்றுக் காலை செய்தியாளர் கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி லெப்டினெண்ட் ஜெனரல் ஆசிம் பஜ்வா தெரிவித்தார்.

சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டவர்களுள் லஷ்கர்=இ=ஜங்விவிய்ன பொக்காரி, சபிர் கான், அல்=காய்தா அமைப்பின் இந்தியத் துணைக்கண்டத் தின் துணைத் தளபதி ஃபாரூக் பட்டி ஆகியோரும் அடங்குவதாக அவர் கூறி னார். பிடிபட்ட 97 பேரும் விமானத் தளம் தகர்ப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றங் களில் தேடப்பட்டு வந்த வர்கள் என்றது ராணுவம்.

பாகிஸ்தான் மத்திய சிறைச்சாலை. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!