மணமேடையில் இருந்து விழுந்தும் மணமக்களின் மகிழ்ச்சி மங்கவில்லை

மணநாள் மறக்க முடியாத நாளாக அமைவதற்கு அனைவருமே ஆசைப்படுவர். அழகுக்கு அழகு சேர்க்கும் ஒப்பனையுடன், பிரம்மாண்ட அலங்காரத்துடன் கூடிய திருமண அரங்கிற்குள் நுழைவது அனைவரின் கனவாக இருக்கும். அதற்காக வெகுநாள்கள் பெருமுயற்சியுடனான திட்டமிடல் இடம்பெறும்.

ஆனால், ஒருசிலருக்குத் திட்டமிட்டபடி நடக்காமல் போய்விடலாம். அந்தக் கதைதான் இந்த இணையர்க்கு நிகழ்ந்தது.

சமூக ஊடகங்களில் பரவலாக வலம்வரும் இந்தக் காணொளியில், மணமகனும் மணப்பெண்ணும் கைகோத்து நடனமாடியபடி மணவரங்கிற்கு வருகின்றனர். மேடையில் ஏறியதும் மணமகன், தன் வருங்கால மனைவியை முதுகில் தூக்கிச் சுமக்க முயல்கிறார். ஆயினும், நிலை தடுமாறவே, அவர்கள் இருவரும் மேடையிலிருந்து கீழே விழுந்துவிடுகின்றனர்.

இருப்பினும், அவர்களின் உற்சாகம் சற்றும் குறையவில்லை. திரும்ப எழுந்து மீண்டும் மகிழ்ச்சியில் குதிக்கின்றனர். இந்த வேடிக்கையான காணொளியை இதுவரை இரண்டரை மில்லியன் பேர்க்குமேல் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!