தைவான் நிலநடுக்கம்: மாண்டவர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு

தைனான்: தைவானின் தைனான் நகரில் சென்றவாரம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்னும் குறைந்தது 30 பேரைக் காணவில்லை. இனிமேல் உயிருடன் யாரையும் மீட்க முடியும் என்ற நம்பிக்கை மங்கி வருவதாகக் கூறப்பட்டது. அந்நிலநடுக்கத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த இரு நாள்களுக்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கி 61 மணி நேரம் உயிருக்குப் போராடிய 8 வயது சிறுமி உள்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில், கட்டட இடிபாடுகளுக்கு இடையே 100க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 1989ஆம் ஆண்டு கட்டப்பட்ட அக்கட்டடம் முற்றிலுமாக இடிந்து விழந்துள்ளது

நிலநடுக்க இடிபாடுகள். படம்:ஏஎஃப்பி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!