புதிய தலைமையின் கீழ் புதுப் பொலிவு

ப. பாலசுப்பிரமணியம்

எஸ்-லீக்கின் தெம்பனிஸ் ரோவர்ஸ் காற்பந்துக் குழுவுக்குப் புதிய தலைவர் அறிமுகமானதும் அதனுடன் வந்த மாற்றங்கள் உள்ளூர் காற்பந்து ரசிகர்களை அன்னாந்து பார்க்கச் செய்து உள்ளது. கடந்த நவம்பர் மாதம் அக்குழுவின் தலைவரான திரு கிருஷ்ணா ராமசந்திரா சிங்கப்பூரில் ரொனால்டீனியோ காற் பந்துப் பயிலகத்தை இவ்வாண்டு தொடங்க ஒப்பந்தம் செய்தார். தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவில் மொத்தம் 17 புதிய விளையாட்டாளர் களை அவர் சேர்த்திருக்கிறார். முன்னாள் இங்கிலிஷ் லீக் காற்பந்து விளையாட்டாளரான ஜெர்மேன் பென்னண்ட் இப்பருவத் தில் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவுக்குக் களமிறங்குவார். இவரைப் போன்ற உயர்மட்ட ஆட்டக்காரரை எஸ்=-லீக் இதுவரை கண்டதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னாள் லிவர்பூல் குழுவின் ஆட்டக்காரரான பென்னண்ட்டுக்கு மாதம் சுமார் $40,000 சம்பளம் வழக்கப்படும். எஸ்-லீக்கின் 20 ஆண்டு வரலாற்றில் அதிக சம்பளம் பெறும் விளையாட்டாள ராக பென்னண்ட் திகழ்கிறார். பென்னண்ட்டை தெம்பனிஸ் ரோவர்ஸ் வாங்கியதற்கான காரணத்தை திரு கிருஷ்ணா தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார். "எந்த வெளிநாட்டு காற்பந்து விளையாட்டாளரை வாங்கினாலும் உள்ளூர் காற்பந்து விளையாட்டாளர் களின் மேம்பாட்டுக்கு அவர் உதவ வேண்டும். அந்த அடிப்படையில் பென்னண்ட்டால் குழுவுக்கு பங்களிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார் கிருஷ்ணா.

தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவைப் புதிய சிகரத்துக்குக் கொண்டு செல்ல முனைப்புடன் காத்துக்கொண்டிருக்கும் அதன் (இடமிருந்து வலம்) பயிற்றுவிப்பாளர் வி. சுந்தரமூர்த்தி, நட்சத்திர வீரர் ஜெர்மேன் பென்னண்ட், தலைவர் கிருஷ்ணா ராமச்சந்திரா. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!