ஜெயலலிதாவும் முன்பு நடிகையாகத்தான் இருந்தார்: குஷ்பு, இளங்கோவன் பேச்சு

சென்னை: தம்மைப் போலவே முதல்வர் ஜெயலலிதாவும் முன்பு நடிகையாக இருந்தவர்தான் என நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார். ஈரோட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை சந்தித்த செய்தியாளர்கள், காங்கிரசுக்கு நடிகைகளின் பின்னால் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அதிமுகவினர் புகார் கூறுகிறார்களே? என கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த இளங்கோவன், ஜெயலலிதாவும் ஒரு நடிகை தானே? என்று கேட்டார். நடிகைகளும் அரசியலில் நுழைவதற்கு உரிமை உண்டு என்றார் அவர்.

அப்போது அருகில் இருந்த குஷ்பு, காங்கிரசில் உள்ளவர்கள் தன்னை நடிகையாகப் பார்க்கவில்லை என்றும் சாதாரண தொண்டராகவே கருதுவதாகவும் கூறினார். "ஜெயலலிதா என்ன மவுண்ட் பேட்டன் பிரபுவின் பேத்தியா? அல்லது அன்னிபெசன்ட் அம்மையாரின் வாரிசா? நடிகையாக இருந்த ஜெயலலிதாதானே இப்போது தமிழகத்தை ஆள்கிறார்? அதிமுகவினர் மட்டுமே என்னை நடிகையாக பார்க்கின்றனர். அதற்காக நான் கவலைப்படுவதில்லை," என்று ஆவேசத்துடன் கூறினார் குஷ்பு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!