நியூகாசலை ஓட ஓட விரட்டிய செல்சி

செல்சி: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் செல்சி அணி அதன் முந்தைய நிர்வாகியான ஜோசெ மொரின்யோவுக்கு விடை கொடுத்த பிறகு தனது சொந்த மைதானமான ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜில் விளையாடிய ஆட்டங் களில் வெற்றி பெற்றதில்லை. ஆனால் நேற்று நியூகாசலு டனான அதன் ஆட்டத்தில் இதை அப்படியே மாற்றிப்போட்டது அந்த அணி. நேற்றைய ஆட்டம் தொடங் கிய 20 நிமிடங்களில் மூன்று கோல்களை போட்டு அது நியூகாசலை ஓரங்கட்டியது.

அந்த கோல்களை செல்சி யின் டியேகோ கோஸ்டா, பெட்ரோ, வில்லியன் ஆகியோர் போட்டு செல்சி அணிக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத் தினர். பின்னர், இரண்டாம் பாதி ஆட்டத்தில் பெட்ரோ, டிரயோரே ஆகியோர் மேலும் இரு கோல்கள் போட்டு இறுதியில் 5=1 என்ற வெற்றியைத் தேடித்தந்தனர். நேற்றைய வெற்றியின் மூலம் நாளை நடைபெறவுள்ள சாம்பி யன்ஸ் லீக் போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மனை சந்திக்க தயாராக உள்ளதாக செல்சி பறை சாற்றின. "ஆட்டம் தொடங்கிய உடனேயே நியூகாசல் குழுவை ஆச்சரியத்துக்கு உள்ளாக்க நினைத்த எங்களுக்கு வெற்றி கிடைத்தது. அதில் இரண்டு அற்புதமான கோல்கள் போட்டோம்.

ஆட்டத்தின் முதல் 20 நிமிடங்கள் எங்களது வெற்றியை உறுதி செய்தது," என்று பெருமிதத்துடன் கூறினார் செல்சியின் கூஸ் ஹிட்டிங். மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட்ஹேம் குழு 2-2 என நார்விச் குழுவுடன் சமநிலை கண்டது.

நேற்று அதிகாலை செல்சியின் ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தில் செல்சி வீரர் பெட்ரோ தமது அணியின் நான்காவது கோலை போடுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!