வெங்கையா: நகரத் தேர்வில் பாகுபாடு இருக்காது

இந்தூர்: விவேக நகரங்கள் திட்டத்தின் கீழ் வரக்கூடிய நகரங்களைத் தேர்வு செய்ததில் எவ்வித பாகுபாடும் காட்டவில்லை என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் விவேக நகரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், இத்திட்டத்திற் கான நகரங்களைத் தேர்வு செய்வதில் தமக்கோ, பாஜகவுக்கோ எந்தவித தொடர்பும் இல்லை என்றார். "போட்டி வைத்தும் தூய் மையைப் பராமரிப்பதில் திறம்பட செயல்படும் தகுதியைக் கொண் டுமே முதல் பட்டியலுக்கான இருபது நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நகரங்களைத்தான் தேர்வு செய்யவேண்டும் என முன்கூட்டியே முடிவுசெய்து அவற்றை மத்திய அரசு தேர்வு செய்ய வில்லை," என்றார் வெங்கையா.

பிரதமர் மோடியின் தொகுதி யான வாரணாசி, மத்திய அமைச்சர்களின் தொகுதிகளில் இடம்பெறும் நகரங்களும் முதற்கட்ட பட்டியலில் இடம் பெறவில்லை என்பதை கருத் தில் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், பாகுபாடு காட்டப்படுவதாக கருதும் மாநி லங்கள் குறை சொல்வதை தவிர்த்து பட்டியலில் ஏன் இடம் பெறவில்லை என்பதை ஆராய வேண்டும் என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!