முதியோரின் நட்பு வட்டத்தை வளர்க்கும் புத்தாண்டுக் கொண்டாட்டம்

முஹம்­மது ஃபைரோஸ்

தோழிகள் கருப்பையா ருக்மணி, கே.சரோஜினி நாரா­ய­ணன் இரு­வ­ருக்­கும் தனிமையை மறந்து மகிழ்ச்­சியோடும் புத்­து­ணர்வோடும் பலருடன் அளவளாவ வாய்ப்பளித் தது நீ சூன் தெற்கு தொகு­தி­யில் வசிக்­கும் மூத்த குடி­யி­ருப்­பா­ளர்­களின் சீனப் புத்­தாண்­டுக் கொண்டாட்­டம். "இரு­வ­ரும் பத்­தாண்­டு­களுக்கு மேலாக சீனப் புத்­தாண்­டுக் கொண்டாட்­டங்களில் பங்­கேற்று வரு­கி­றோம். ஒவ்வோர் ஆண்டும் புதுமை­யான அனு­ப­வத்தைப் பெறு­கி­றோம். புதிய நண்­பர்­களைச் சந்­ திக்­கி­றோம். புதிய விஷ­யங்களைத் தெரிந்­து­ கொள்­கி­றோம்," என்றார் திரு­வாட்டி ருக்­கு­மணி, 72. "எங்களைப் போன்று வீட்டில் தனியாக வாழும் முதி­ய­வர்­கள் இது­போன்ற நிகழ்ச்­சி­களில் ஒன்று கூடும்­போது தனிமையை மறந்­து வி­டு­கின்­றோம். மற்­ற­வர்­களின் பாரம்ப­ரி­யம், கலா­சா­ரங்களைத் தெரிந்துகொள்ளவும் வாய்ப்புக் கிடைக்­கிறது," என்றார் திரு­வாட்டி சரோஜினி, 77.

சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்­து ­கொண்ட நீ சூன் குழுத்­தொ­கு­தி ­யின் அடித்­தள அமைப்­பு­களுக்­கான ஆலோ­ச­க­ரும் நீ சூன் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டாக்டர் லீ பீ வா, மூத்த குடி­மக்­களுக்கு மேண்ட­ரின் ஆரஞ்­சுப் பழங்களை­யும் அன்பர் தினத்தைக் கொண்டாட இதய வடி­வி­லான சாக்­லெட்­டு­களை­யும் உள்­ள­டக்­கிய சிவப்­பு­நிற பைகளைக் கொடுத்­தார். மூத்­தோரைக் கௌர­வப்­படுத்தி அவர்­களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்­து­களைத் தெரி­வித்து சிறிய பரிசை வழங்­கு­வது தமக்கு அள­வற்ற மகிழ்ச்சி அளிப்­ப­தாக டாக்டர் லீ கூறினார். "நீ சூன் தெற்கு தொகு­தி­யில் வசிக்­கும் மூத்தக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் அண்டை வீட்டாரை நன்கு தெரிந்து வைத்­துள்­ள­னர். "காலை வேளை­களில் காப்பிக் கடை­களில் சக நண்­பர்­களு­டன் அமர்ந்து அள­வ­ளா­வு­வது இவ்­வட்­டா­ரத்­தில் வழக்­க­மான காட்சி. அத்­து­டன், இது­போன்ற ஒன்­று­ கூ­டல் நிகழ்ச்­சி­கள் சமூக உணர்­ வுக்கு வலுச் ­சேர்க்க உத­வு­கின்றன," என்றார் அவர்.

நீ சூன் தெற்கு தொகுதியில் வசிக்கும் மூத்த குடியிருப்பாளர்களுடன் டாக்டர் லீ பீ வா (இரண்டாவது வரிசையில் இடமிருந்து நான்காவது). நீ சூன் சவுத் சமூக மன்றத்தில் துடிப்புடன் மூப்படையும் குழு நேற்று ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மூத்த குடியிருப்பாளர்கள் பங்கேற்றனர். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்கள் நிறைந்த நிகழ்ச்சியில் பகல்நேர உணவு விருந்தும் வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி, ஆண்டுதோறும் சீனப் புத்தாண்டின்போது பெரும்பாலும் தனியாக வாழும் மூத்தக் குடியிருப்பாளர்களிடையே விழாக்கால உணர்வு, அன்பு, பரிவு போன்றவற்றைப் பகிர்ந்து வருகிறது. படம்: மக்கள் கழகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!