ஒரே நேரத்தில் வெளியாகும் சிம்பு, கார்த்தி படங்கள்

இப்படத்தில் சிம்பு மூன்று தோற்றங்களிலும் அவருக்கு ஜோடியாக மூன்று முன்னணி நாயகிகளையும் நடிக்கவைக்கப் போவதாகவும் செய்தி கள் வெளிவந்தது. இந்நிலையில், இப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை யமைக்கப் போவதாகக் கூறப்படுகிறது. சிம்பு நடித்த 'காளை' படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்தது. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படத்திற்கு மீண்டும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். சிம்பு படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்று கேள்வி. விரைவில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகுமாம்.

ஜி.வி.பிரகா‌ஷுடன் சிம்பு இணைவது ஒருபக்கம் என்றால், பிடிப்பும் முடிந்துவிட்டது. இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தையும் அதே தேதியில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. 'இது நம்ம ஆளு' படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இதில் சிம்பு, நயன்தாராவுடன் இணைந்து நடிப்பதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. 'தோழா' படத்தில் கார்த்தி, தமன்னா மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்க ளுடன் நாகார்ஜுனாவும் நடிக்கிறார். எனவே இந்தப் படமும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படமாக உள்ளது. மார்ச் 25ஆம் தேதி 'இது நம்ம ஆளு', 'தோழா' படங்கள் திரைக்கு வருவதால் சிம்பு, கார்த்தி படங்கள் முதல்முறையாக ஒரே நேரத்தில் வெளியாகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!